Sunday 24 August 2014

கர்ப்ப காலத்தில் பெண்கள் தவிர்க்க வேண்டிய விஷயங்கள் 05

Photo: கர்ப்ப காலத்தில் பெண்கள் தவிர்க்க வேண்டிய விஷயங்கள் 05

வெந்நீரில் குளிப்பதை தவிர்க்க வேண்டும் மேலே கூறியதை போல் திடீர் வெப்பம் சிசுவிற்கு ஆபத்தை விளைவிக்கும். அதனால் சூடான நீரை கொண்ட தொட்டியில் குளிப்பது, நீண்ட நேரம் வெந்நீரில் குளிப்பது போன்றவற்றை கர்ப்பிணி பெண்கள் தவிர்க்க வேண்டும். இவை அனைத்தும் உடல் வெப்பத்தை 102 டிகிரிக்கு மேல் அதிகரிக்க செய்யும். அதனால் சிசுவின் பாதுகாப்பை மனதில் வைத்துக் கொண்டு, கர்ப்பிணி பெண்கள் இதனை தவிர்க்க வேண்டும். அதனால் தான் எலெக்ட்ரிக் போர்வையையும் தவிர்க்க வேண்டும்.
***
ஆபத்தான உடற்பயிற்சியை தவிர்க்க வேண்டும் லேசான உடற்பயிற்சி கர்ப்பிணி பெண்களுக்கு நன்மையை ஏற்படுத்தினாலும், காயம் ஏற்படுத்தும் ஆபத்தான விளையாட்டு மற்றும் உடற்பயிற்சிகளை தவிர்க்க வேண்டும். கூடைப்பந்து, ஹாக்கி, பனிச் சறுக்கு போன்ற விளையாட்டுக்களும் இதில் அடங்கும். விளையாட்டினால் ஏற்படும் காயங்களும், பலன்களும் உட்புற இரத்தக்கசிவு, கருச்சிதைவு மற்றும் சிசுவின் எலும்புகளில் காயம் போன்றவற்றை உண்டாக்கும். அதனால் குழந்தை பிறக்கும் வரை கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபடாதீர்கள். கர்ப்ப காலத்தில் வயிற்றுப் பகுதியில் அடிப்பட்டால் உடனே மருத்துவரை சந்தியுங்கள்.

****
எக்ஸ்ரே மற்றும் இதர கதிர் வீச்சுகள் படாமல் இருக்க வேண்டும் கர்ப்பிணி பெண்கள் எக்ஸ்ரே மற்றும் இதர கதிர் வீச்சுகள் படாமல் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இவை பெரிய பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும், கருவுற்ற ஆரம்ப காலத்தில் எக்ஸ்ரே பெரிய பாதிப்பை உண்டாக்கும். அதனால் மருத்துவர் அல்லது பல் மருத்துவரிடம் கர்ப்பமாக இருப்பதை தெரிவித்து விடுங்கள். அதனால் எக்ஸ்ரே எடுப்பதை போதுமான வரை தள்ளி வைக்கலாம். மின்காந்த அலையில் சிறிதளவு பட்டாலும் போதும், அது சில உயிரணுக்களை பாதிக்கும் என ஆய்வுகள் கூறுகிறது. மேலும் தொலைகாட்சி அல்லது மைக்ரோ ஓவன் அருகில் அதிக நேரம் நிற்க கூடாது.

No comments:

Post a Comment