Thursday 3 July 2014

செக்ஸ்சில் உங்களுக்கு தெரியாத சில விடயங்கள்..

 


 
காம சூத்திரம் என்பது என்ன?
காம சூத்திரம் என்பது காதல், காமம், உறவு கொள்வது பற்றி விவரிக்கும் ஒரு பண்டைய வடமொழி நூலாகும். இது வாத்சாயனர் என்பவரால் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது. இன்று காம சூத்திரம் பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்நூலிலேயே அறம்(தர்மம்), பொருள்(அர்த்தம்) ஆகியவற்றுக்கு பிறகே காமம் என தெளிவாக கூறப்பட்டுள்ளது.
எனினும் மேலை நாட்டவரின் தவறான மொழிபெயர்ப்பினாலும் மூலநூலில் இல்லாத பாலியல் சித்திரங்களையும் பின்னர் இணைத்ததனாலும் இந்நூல் பாலுறவு நிலைகள் பற்றியதாகவே பரவலாக அறியப்படுகிறது. உண்மையில் பாலுறவு நிலைகள் நூலின் ஒரு பகுதியேயாகும்.
ஆணுறை எப்போது கண்டுபிடிக்கப்பட்டது?
ஆணுறை (“காண்டம்‍”)உண்மையில் 18 ஆம் நூற்றாண்டில், பிரிட்டிஷ் மருத்துவர் ஜான் காண்டனால், பிரான்சின் அரசனான‌ இரண்டாம் சார்லஸ் க்கு தயாரித்து வழங்கினார். இவர் பெயராலேதான் இன்று வரைக்கும் “காண்டம்”, என்று ஆங்கிலத்தில் இப்போதும் அழைக்கப்பட்டு வருகின்றது. சரித்திர‌ காதலன் ஜியோவானி காஸநோவா (1725-1798) பாலுறவு நோய்களில் இருந்து தன்னை பாதுகாக்க செம்மறி ஆட்டின் குடல் துண்டுகளை ஆணுறையாகப் பயன்படுத்தினான்.
STD என்றால் என்ன‌ ?
STD (Sexually transmitted diseases)
பாலியல் நோய்கள்(Sexually transmitted diseases) எனப்படுபவை பாலியற் தொடர்புகள் மூலம் கடத்தப்படும் நோய்களாகும். யோனிவழி, குதவழி(anal) மற்றும் வாய்வழிப்(oral) பாலுறவால் இவை பரவுகின்றன. பாலியற் தொடர்புகளாற் பரப்பப்படும் பெரும்பாலான நோய்களைச் சரியான மருத்துவ சிகிச்சை (பண்டுவம்) மூலம் முற்றாகக் குணப்படுத்தலாம். கருவுற்ற பெண்களுக்கு இந்நோய்கள் தொற்றினால் குழந்தையும் பாதிக்கப்படும் வாய்ப்புக்கள் உள்ளன. சிபிலிசு(Syphilis), கொணோறியா(Gonorrhea), கிளமிடியா(Chlamydia) போன்ற பாலியல் நோய்கள் எய்ட்ஸ் ஏற்படும் ஆபத்தை அதிகரிக்க வல்லன.

No comments:

Post a Comment