Wednesday, 19 November 2014

உடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி

உடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி 

தற்போது நிலவி வரும் பருவ நிலா மாற்றத்தால் நம்மில் பலருக்கு உடலில் அதிக உஷ்ணம்(வெப்பம்) ஏற்படுகிறது, 

இது முக்கியமாக அதிக நேரம் வெளியில் பயணங்கள் மேற்கொள்வோருக்கும், அதிக நேரம் நாற்காலி, சோபா மீது உட்கார்ந்திருப்பதாலும் ஏற்படுகிறது, இதனால் நம் தலை முடி முதல் கால் வரை உள்ள அனைத்தும் ஆரோக்கியத்தை இழக்கிறது, 

இதனால் ஏற்படும் நோய்கள் முக்கியமாக முகப்பரு, தோல் வியாதிகள், தலை முடி உதிர்தல், வாயிற்று வலி, உடல் எடை குறைதல் போன்ற எரிச்சலூட்டும் நிகழ்வுகள் நிகழ்கிறது, இதனை சரி செய்ய நம் சித்த பெருமைக்க அன்றைய காலகட்டத்திலேயே ஒரு எளிய மற்றும் ரகசியமான வழியை உங்களுக்காக கொடுக்கிறோம்.

தேவையான பொருள்கள் :
1.நல்லெண்ணெய்
2.பூண்டு
3.மிளகு

செய்முறை:

நல்லெண்ணையை ஒரு குழி கரண்டியில் தேவையான அளவு எடுத்து கொண்டு அதனை மிதமான சூட்டில் சூடு படுத்தவும், எண்ணெய் காய்ந்ததும் அதில் மிளகு மற்றும் தோல் உரிக்காத பூண்டை போட்டு சில நிமிடத்தில் சூடானதும் அடுப்பில் இருந்து இறக்கி, சூடு ஆறினதும் எண்ணையை காலின்(இரு கால்) பெருவிரல் நகத்தில் மட்டும் பூசி விட வேண்டும், 2 நிமிடங்கள் கழித்து உடனே காலை கழுவி விட வேண்டும், இதனை செய்யும் போதே உங்கள் உடம்பு குளிர்ச்சி அடைவதை உணர முடியும், 2 நிமிடத்திற்கு மேல் இதனை விரலில் வைத்திருக்க கூடாது, சளி ஜுரம் உள்ளவர்கள் இதனை முயற்சி செய்ய வேண்டாம், மிகுந்த மன அழுத்தம் , உஷ்ண உடம்பு உள்ளவர்கள் இதனை கட்டாயம் செய்து பயன்பெறுங்கள். 

இதன் வாசனை தெய்வீக தன்மை கொண்டதாக இருக்கும்.
அந்த காலத்தில் சித்தர்கள், குழந்தை இல்லாத ஆண்கள் தங்களிடம் குழந்தை வேண்டும் என்று வந்தால் மேல் குறிப்பிட்ட மருத்துவ முறையையே சொல்வார்களாம். 

ஏனெனில் இதனை செய்வதன் மூலம் ஆண்களின் விந்து விருத்தி அடைந்து மூன்று மாதத்தில் குழந்தை பிறக்குமாம், இதனை IT (18 வயதுக்கு மேல்) துறையில் வேலை செய்பவர்கள் தினமும் காலை குளிக்க போகும் முன் 1 நிமிடத்திற்கு எண்ணையை தடவினால் மன அழுத்தம் நீங்கும். மேலும் சிறியவர்களாக இருந்தால் வாரத்தில் இருமுறை இதனை செய்யலாம்.

நண்பர்களே இந்த செய்தியை நீங்கள் படித்தது மட்டுமின்றி மற்ற (குழந்தை இல்லாதவர்கள், உஷ்ண உடம்பால் பாதிக்க பட்டவர்களும்) பயன் பெற இந்த செய்தியை பகிர்ந்து மகிழுங்கள்.

Relaxplzz

Sunday, 2 November 2014

இல்லவே " இல்லாத" நாடுகள்

1) "திரையரங்குகள்" இல்லாத நாடு - பூட்டான்
2) "தினசரி பத்திரிகைகள் " இல்லாத நாடு - காம்பியா
3) "காகங்கள்" இல்லாத நாடு - நியூசிலாந்து
4) "ரயில்" இல்லாத நாடு - ஆப்கானிஸ்தான்
5) "பாம்புகள் " இல்லாத நாடு - அயர்லாந்து
6) தனக்கென " உத்தியோகபூர்வ தலைநகரம்" இல்லாத நாடு - நவ்ரு
7) தனக்கென "தாய்மொழி" இல்லாத நாடு - சுவிட்சர்லாந்து
8) "பொதுக்கழிப்பறைகள்" இல்லாத நாடு -பெரு
9) " வாடகைக்கார்கள்" இல்லாத நாடு - பெர்முடா

Saturday, 1 November 2014

நீங்கள் கையெழுத்துப் போடும்ஸ்டைலில்உங்கள் கேரக்டரைக் கண்டுபிடித்துவிடமுடியும் தெரியுமா ?

1) கையெழுத்துப் போட்டு விட்டுக்கீழே சின்னக் கோடு போட்டால்...
தைரிய பார்ட்டிகள் . நல்லவர்தான்ஆனால்,கொஞ்சம் சுயநலமாகச் சிந்திப்பீர்கள். இந்தஸ்டைலில் கையெழுத்திடும் வி.ஐ.பி -க்கள்.. , சச்சின், சாப்ளின்,வின்ஃப்ரே..
2) கையெழுத்தின் கீழ் இரண்டு புள்ளிகள் வைத்தால்...
ரொமான்டிக் பார்ட்டி .உடை மாற்றுவதுபோலக் காதலன் /காதலியை மாற்றுவீர்கள் .மற்றவர்களை ஈசியாக அட்ராக்ட்செய்வீர்கள் .அமிதாப் இந்த ஸ்டைலின் வி.ஐ.பி..
3) கையெழுத்துக்குக்கீழே ஒரே ஒரு புள்ளி வைத்தால்...
கூல் பார்ட்டி . சிம்பிளாக இருப்பீர்கள் .பிடிக்காதவர்களைத் திரும்பிக்கூடப்பார்க்க மாட்டீர்கள். இந்த ஸ்டைலின் வி.ஐ.பி.டாக்டர் விக்ரம் சாராபாய்..
4) உங்கள் கையெழுத்தின் கீழ்புள்ளியோ,கோடோ கிடையாதா ?
உங்கள் வாழ்க்கை உங்கள்கையில்தான் .அடுத்தவர்கள் கருத்து சொன்னால் கண்டுகொள்ளவே மாட்டீர்கள் . இதில் பாரக்ஒபாமா இருப்பார் ..
5) பெயருக்கு சம்பந்தமே இல்லாமல் கையெழுத்துப் போட்டால்...
கமுக்க பார்ட்டி . உங்களிடம் நம்பி ரகசியம்சொல்லலாம் . கொஞ்சம் புத்திசாலியும்கூட . இந்த ஸ்டைலின்கீழ் மர்லின் மன்றோ,கபில்தேவ்..
6) பெயருக்குத் தொடர்புள்ள ஆனால்,கோழி கிண்டிய மாதிரி புரியாதகையெழுத்துப் போட்டால்...
புத்திசாலி பார்ட்டிகள் . ஆனால்,யோசிக்காமல் முடிவெடுப்பீர்கள் .ஒரு வரி பாராட்டுதலுக்கே மயங்கி விடுவீர்கள் .
இதில்இந்திரா காந்தி,டாக்டர் ஜாகிர் ஹுசேன் ..
7) முழுப் பெயரையும் பொறுமையாகக் கையெழுத்துப் போட்டால்...
நல்லவர் . ஆளுக்கும்,
சூழலுக்கும தகுந்தமாதிரி அட்ஜஸ்ட் செய்வீர்கள் . ஆனால்,உங்கள் கருத்துக்களில் தெளிவாகஇருப்பீர்கள் . பில் கிளிண்ட்டன், மன்மோகன்சிங் இதில் அடங்குவர் ..
8.)வெறுமனே பெயரை எழுதிவைத்தால்...
அம்மாஞ்சி . பாசமாகவும்,உறவுக்கு உயிரையும் கொடுப்பீர்கள் .இந்தவகை வி.ஐ.பி -க்கள் எம்.எஸ்.சுப்புலட்சுமி, மதர் தெரஸா ..
9) கையெழுத்துக்குக் கீழே தேதி,வருடம் போடுவீர்களா ?
ஓல்டு பார்ட்டிகள் . பாரம்பரியக்கலை பிடிக்கும் . முடிவெடுக்க நின்று நிதானமாக யோசிப்பீர்கள் . இந்த ஸ்டைலில் கையெழுத்திட்ட வி.ஐ.பி .சர்.சி.வி.ராமன் .
இதுல உங்க கையெழுத்து எதுல இருக்கு பாஸ்...?
இதை மட்டுமே நம்பிக் கொண்டிருக்காமல் தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிர் கொள்ளுங்கள் ...

Thursday, 23 October 2014

உங்கள் Pendrive ஐ RAM ஆக மாற்ற வேண்டுமா?

கணினியில் பல தொழில்நுட்பம் வந்துவிட்ட நிலையில் அவற்றின் பயன்பாடுகளை பயன்படுத்த தேவைப்படும் நினைவாற்றலின் அளவை எண்ணி பார்க்கும் போது பகல் கனவாகவே உள்ளது.
இப்பிரச்சனையை கணனியின் RAM அளவை அதிகரிக்கும் பொழுது சரி செய்யலாம். ஆனால் RAMன் விலை அதிகமென்பதால் நாம் பயன்படுத்தும் Pendriveவை RAM ஆக மாற்றி பயன்படுத்தலாம்.

பயன்படுத்தும் வழிமுறைகள்:

1. பயன்படுத்தும் Pendriveவில் உள்ள அனைத்து தகவலையும் நீக்கிவிட்டு Pendriveவை கனணியின் USB portல் பொறுத்தவும். (Minimum 2 GB)

2. MY COMPUTER யை Right click செய்து அந்த menuவில் உள்ள PROPERTIES யை click செய்யவும்.

3. அடுத்ததாக தோன்றும் system properties menu வில் உள்ள advanced என்ற tab யை click செய்யவும்.
4. Setiing என்பதை Click செய்க
5.Performance window வில் advance க்கு கீழாக உள்ள change யை click செய்யவும்.

6. தோன்றும் அடுத்த window வில் உள்ள உங்களின் pendrive தோற்றத்தை select செய்து custom size யை தெரிவு செய்யவும்.

7. Initial Size:1020 ,Maximum size:1020 என மாற்றம் செய்யவும். இந்த அளவை உங்களின் pendive அளவை பொறுத்து மாற்றி அமைக்கலாம்.

8. set என்பதை click செய்யவும்.

9. கடைசியாக ok செய்தவுடன் கனணியை restart செய்யவும்

இனி உங்கள் கணணியை WiFi ஆக பாவியுங்கள்

ஆரம்பமாக Start க்கு செல்லுங்கள்.

பின்பு அதில் Search Bar இல் cmd என Type செய்யுங்கள். பின்பு cmd என்ற File ஐ Right Click செய்து Run as Administrator என்பதை அழுத்துங்கள்.

பின்பு வரக்கூடிய Dialoge Box இல் உள்ள Yes என்பதை Click பண்ணுங்கள்.

வரக்கூடிய Command Prompt இல் netsh wlan show drivers என Type செய்து Enter பண்ணுங்கள். பிறகு பின்வருமாறு தோன்றும். அதில் Hosted network supported : என்பது YES என இருக்கின்றதா என உறுதி செய்யுங்கள்.
அடுத்ததாக நீங்கள் கீழே netsh wlan set hostednetwork mode=allow ssid=Hotspotnamekey=password என Type செய்து Enter பண்ணுங்கள். (Hotspotname என்பதற்கு பதிலாக உங்களுக்கு விருப்பமான பெயரை கொடுக்கலாம்.) இப்பொழுது WiFi உருவாக்கப்பட்டுவிட்டது. எங்கிலும் அது Offline இல் தான் உள்ளது.

நீங்கள் WiFi ஐ Start பண்ண netsh wlan start hostednetwork என Type செய்து Enter பண்ணுங்கள். இனி உமது WiFi ஏனைய Mobile களிலோ அல்லது Computer களிலோ காட்டும்.
அதை நிறுத்த netsh wlan stop hostednetwork என Type செய்து Enter பண்ணுங்கள்.
WiFi இன் விபரங்களை அறிய netsh wlan show hostednetwork என Type செய்து Enter பண்ணுங்கள்.

Tuesday, 21 October 2014

வேலை பார்க்கும் பெண்களுக்கான சட்டங்கள் என்ன?

மகப்பேறு நல சட்டம், 1961
(மெட்டர்னிட்டி பெனிஃபிட் ஆக்ட் 1961)
ஆகாய விமானம் ஓட்டுவதில் தொடங்கி,
ஆண்களைக் காலில் விழச் செய்கிற
வரை இன்று பெண்களால் எல்லாம் முடியும்.
பெண்கள் இல்லாத துறை என்பதே அரிதாகிக்
கொண்டிருக்கிற காலகட்டம் இது. ஆனாலும்,
வேலை என்று வீட்டை விட்டு வெளியே வரும்
பெண்கள், பணியிடத்துச் சூழலில்
பாதுகாப்பை உணர்கிறார்களா?
இந்திய அரசியல் அமைப்பு சாசனம்,
‘சட்டத்தின் முன் அனைவரும் சமம்’
என்று கூறினாலும் அதன் 15(3) ஷரத்தின்
கீழ் பெண்களுக்கும் குழந்தைகளுக்குமான
தனிச்சட்டங்கள் இயற்ற
வழிவகை செய்துள்ளது. அதன்
அடிப்படையிலேயே பல நலச் சட்டங்கள்
இயற்றப்பட்டு நடைமுறையில் உள்ளன. நம்
நாட்டில் உழைக்கும் மகளிருக்காக இருக்கும்
சட்டங்கள் என்ன என்ன? அவை கொடுக்கும்
பாதுகாப்பு என்ன? என்பது உழைக்கும்
பெண்களில் எத்தனை பேருக்குத் தெரியும்?
மகப்பேறு நல சட்டம், 1961
(மெட்டர்னிட்டி பெனிஃபிட் ஆக்ட் 1961)
ஒரு பெண்ணுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும்
சிரமத்தையும் ஒரே நேரத்தில் கொடுக்கும்
காலம்தான் அவளது தாய்மைப் பருவம்.
தாய்மையடைந்த நிலையில் வேலைக்குச்
செல்லும் போது அவளுக்கு சட்டம்
கொடுக்கும் பாதுகாப்பு மற்றும் சலுகைகள்
பற்றி மகப்பேறு நல சட்டம் 1961
விளக்குகிறது. தாய்மையடைந்துள்ள
ஒரு பெண் மற்றும் அவள் ஈன்றெடுக்கும்
அந்தப் புது வரவின் ஆரோக்கியத்தைப்
பாதுகாக்கவும் குழந்தைப்பேறுக்கு சில
நாள்கள் முன்பும், பின்பும்
சராசரி பணி செய்ய இயலாத தாய்க்கும்
சேய்க்கும் தேவையான விடுப்புடன் கூடிய
பொருளாதார சலுகை மற்றும் இதர சலுகைகள்
அளிப்பது என்ற நோக்கிலேயே இந்தச் சட்டம்
இயற்றப்பட்டுள்ளது.
எங்கெல்லாம் இந்தச் சட்டம் பொருந்தும்?
தனியார் அல்லது அரசுக்குச் சொந்தமான
தொழிற்சாலை, சுரங்கம், தேயிலைத் தோட்டம்
ஆகியவற்றில்
நேரடியாகவோ அல்லது காண்டிராக்டர்
மூலமாகவோ பணி செய்யும் பெண்கள்,
குதிரையேற்றம், சர்க்கஸ் போன்று உடலால்
செய்யும் வித்தைகள் மற்றும் அதை ஒத்த
வித்தைகள், கடை, அங்காடி போன்றவற்றில்
10க்கும் அதிக பெண்கள் - சென்ற 12
மாதங்களில் பணிபுரியும் பட்சத்திலும்,
அரசு, தொழில், வர்த்தகம், விவசாய
ரீதியான பணியில் ஈடுபடுவோருக்கும
2 மாத அறிவிப்பினைத்
தொடர்ந்து அரசாங்கப் பதிவேட்டில்
அறிவித்து இச்சட்டத்தை அவர்களுக்கும்
அமல்படுத்தச் செய்யலாம். இந்தச் சட்டத்தின்
பொருளாதார ரீதியான சலுகைகள்...
பிரசவத்துக்கு முன் 6 வார காலத்துக்கான
சம்பளத்துடன் கூடிய விடுப்பு,
பிரசவத்துக்குப் பின் 6 வார காலத்துக்கான
சம்பளத்துடன் கூடிய விடுப்பு (இந்த 12
வார
விடுப்பினை எப்படி வேண்டுமென்றாலும்
எடுத்துக் கொள்ளலாம்).
நிர்வாகத் தரப்பு இலவச மருத்துவ
பாதுகாப்பு தர இயலாத பட்சத்தில்
குறைந்தது 1,000 ரூபாய்க்கான மருத்துவ
போனஸ். பேறுகாலம், பிரசவம்
அல்லது கருக்கலைப்பின் போது ஏற்படும்
உடல்நலக் குறைவுக்கான சான்றாவணம்
சமர்ப்பிக்கும் பொருட்டு மேலும்
ஒரு மாதத்துக்கான சம்பளத்துடன் கூடிய
விடுப்பு.
கருக்கலைப்பு ஏற்படின் 6 வாரம்
சம்பளத்துடன் கூடிய விடுப்பு. குடும்பக்
கட்டுபாடு அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்தால்
2 வாரம் சம்பளத்துடன் கூடிய விடுப்பு.
பிரசவத்துக்கு 6 வாரம் முன்பும் அதற்கு முன்
ஒரு மாதமும் ஆக மொத்தம் 10 வாரங்கள்
வரை எளிமையான பணி கோர கருவுற்ற
பெண்ணுக்கு உரிமை உண்டு. அந்த
உரிமை கோரும் நேரத்தில்
கருவுற்றதற்கு ஆதாரமாக மருத்துவச்
சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.
பிரசவத்துக்குப் பின் பணியில் சேர்ந்த
பிறகு எப்போதும் கிடைக்கும் பிரேக்
பீரியட் உடன் மேலும் 2 முறை 15 நிமிட
கால அவகாசம் கொண்ட
(குழந்தைக்கு பாலூட்டுவதற்கு)
இடைவெளி கொடுப்பது அவசியம்.
பேறுகாலத்தின் போது பெண்ணின்
பணிமுறையை உடல்நிலைக்கு குந்தகம்
ஏற்படும்படி மாற்றம் செய்யக்கூடாது.
பேறுகாலத்தில் ஒரு பெண்ணை பணி நீக்கம்
செய்யக்கூடாது. அவ்வாறு பணி நீக்கம்
செய்யும் பட்சத்தில் பேறுகால சலுகையைப்
பெற அவர்களுக்கு உரிமை உண்டு.
(ஒருவேளை தண்டனைக்குரிய
குற்றச்செயலுக்காக
வேலையிலிருந்து நீக்கும் பட்சத்தில்
இச்சட்டத்தின் கீழ் சலுகை மறுக்கப்படலாம்).
தாய்மையைப் போற்ற குறிப்பிடும்படியான
ஒரு உச்ச நீதிமன்ற தீர்ப்
India Vs Nargalesh Meerza
என்ற வழக்கின்
தீர்ப்புக்கு முன் வரை இந்திய விமானப்
பணிப்பெண்ணாக பணிபுரிய அதிகபட்ச
வயது 35 ஆகவும் அல்லது பணியில்
சேர்ந்து 4 வருடங்களுக்குள் திருமணம்
நடைபெறுவது அல்லது முதன் முறையாக
தாய்மை அடைவது இதில் எது முன்னர்
நடைபெறுகிறதோ அதன்படி அப்பெண்கள்
பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுக்
கொண்டிருந் தார்கள். குழந்தை பெற்ற
பிறகு தொடர்ந்து பணி செய்வதோ, அந்தப்
பணியிலிருக்கும் போது குழந்தையைப்
பராமரிப்பதோ அந்தப் பெண்ணின் தனிப்பட்ட
பிரச்னை, அது எந்த விதத்திலும்
நிர்வாகத்தைப் பாதிக்காது என்று இந்த
வழக்கின் தீர்ப்பு வலியுறுத்தி,
தாய்மை அடையும் பணிபுரியும்
பெண்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது.
* ஒரு பெண் இச்சட்டத்தின் கீழ் சலுகைகள்
பெற பிரசவத்துக்கு 12 மாதம்
முன்பு குறைந்தபட்சம் 80 நாள்களேனும்
பணி செய்திருக்க வேண்டும். அது
வருகைப்பதிவேட்டில் பதிவாகியிருக்க
வேண்டும்.
‘அசோசியேட் பேங்க் ஆபீசர்ஸ்
அசோசியேஷன் வெர்சஸ் ஸ்டேட் பேங்க் ஆஃப்
இந்தியா’
புகழ் பெற்ற இந்த வழக்கின் தீர்ப்பின் மூலம்
உச்ச நீதிமன்றம் சமமான வேலைக்கு சமமான
கூலி என்ற கோட்பாட்டை மீண்டும்
ஒரு முறை நிலைநிறுத்தி உழைக்கும்
மகளிருக்கு எதிரான ஊதிய
குறைபாட்டை நிவர்த்தி செய்ய
வழிவகை செய்தது. இந்தச்
சட்டத்தின்படி ஒரு நிர்வாகத் தரப்பு தகுந்த
பதிவேடுகளை பாராமரிக்காத பட்சத்திலும்,
மேலும் அது சம்பந்தப்பட்ட
தஸ்தாவேஜு களை சமர்ப்பிக்காத பட்சத்திலும்
இந்தச் சட்டத்துக்குப் புறம்பாக ஆண், பெண்
ஊழியர்களை சமமாக நடத்தாமலும், சமமாக
கூலி கொடுக்காமல் இருக்கும் பட்சத்திலும்
சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்க
வாய்ப்புள்ளது.
இது டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய
தீர்ப்பு.

Monday, 6 October 2014

ATM Online Complaint:

ATM Online Complaint:

மிக மிக முக்கியமான செய்தி ATM /BANK சம்பந்தப்பட்டது. இதுவரை அதிகாரவர்கத்தினர் அலட்சியபோக்கால் பாதிக்கப்பட்டு வந்த அப்பாவிகள், சாமானியர்கள், வாடிகையளர்கள், படிப்பறிவு குறைவானவர்கள் என பல்வேறு தரப்பினர் இனி பாதிக்கபடுவது குறைந்து கொண்டே வரும் என்பது தான் மறுக்க முடியாத உண்மை.

அதன் முதல் அங்கம், இந்தியாவில் அனைத்து வங்கிகளையும் தனது கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கும் RBI (இந்தியன் நடுவண் வங்கி) யின் "ஒபட்சு மேன்" { Ombudsman } என்ற திட்டம் பயனாளர்களுக்கு மிகுந்த சாதகமாகாவும், அசுர வேகத்தில் வாடிக்கையாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்து சிறப்பாக செயலாற்றுகிறது என்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கும் உண்மை.

அப்படியொரு சுவாரசியமான செய்தி தான் நேற்று சென்னையில் நடந்தது. xxxxxxxxxxx(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற வாடிக்கையாளர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசு உடமையாக்கப்பட்ட வங்கி கணக்கிலிருந்து ரூபாய் 3000/- பணம் எடுபதற்கு ATM சென்று உள்ளார்.
அப்போது பணம் வராமல் உங்கள் வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டுவிட்டது என்ற குறுந்தகவல் (SMS ) வந்துள்ளது.
உடனே அந்த வாடிக்கையாளர் மிகுந்த ஏமாற்றத்துடன் வங்கியை அணுகி உள்ளார்.

வங்கியில் ஒரு கடிதம் எழுதி கொடுங்கள் பணம் வந்தால் தருகிறோம் மேலும் அந்த பணம் எடுத்த சீட்டை இதோடு இணைத்து தாருங்கள் என்று கூறியுள்ளனர்.
இவரும் கடிதம் கொடுத்து காத்திருந்து காத்திருந்து பொறுமை இழந்து பலமுறை வங்கியை முறையிட்டும் எந்த பலனும் இல்லை.

சம்பவம் நடந்த நாள் ஏப்ரல் 10 ம் தேதி,மே 10ம் தேதி வரை காத்திருந்து பலன் இல்லாமல் கடைசியாக மே 28ம் தேதி இறுதியாக வங்கியை தொடர்பு கொண்டார்.
அப்போதும் எந்தபலனும் இல்லை, பொறுமை இழந்த XXXXXXX தனது நண்பர் திரு YYYYYYY (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனியார் வங்கியில் வேலை செய்பவரும் ஆன அவரிடம் தனக்கு நடந்த இந்த அவல நிலையை சொல்லி உள்ளார்.
அவர் தான் முதன் முதலில் "ஒபட்சு மேன்" { Ombudsman } பற்றி சொல்லி உள்ளார்.

அதை கேள்வி பட்ட அதே நாளில் தனது அவலத்தை பின்வரும் இணையம் வாயிலாக
https://secweb.rbi.org.in/BO/ComplaintToNodalOfficer.html
ஆதங்கமாக தெரிவித்துள்ளார்.
மே 29 அன்று ரூபாய் 3000/- வங்கி கணக்கில் சேர்ந்துள்ளது.
பின்னர் ஜூன் 18ம் தேதி அவருக்கு நஷ்ட ஈடு தொகை ரூபாய் 525/-ம் செலுத்தி உள்ளனர்.

அந்த சம்பந்த பட்ட வங்கி பலமுறை தொலைபேசியில் தொடர்புகொண்டு நேரில் அழைத்து கைப்பட கடிதமும் வாங்கி உள்ளனர்.

மேலும் சகல மரியாதையும் செய்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது .

இனி உங்கள் வங்கியும் இதுபோன்ற தவறுகளை செய்தால் நீங்களும் யோசிக்காமல் "ஒபட்சுமேன் { Ombudsman }
"https://secweb.rbi.org.in/BO/ComplaintToNodalOfficer.html

சொடுக்கி உங்கள் குற்றங்களை பதிவு செயுங்கள்.

நீங்கள் கூறும் குற்றம் உண்மை என்று நிருபணம் செய்யபட்டால் சமந்தப்பட்ட அதிகாரி பணியிடை நீக்கம் செய்யபடும் அளவிற்கு "ஒபட்சு மேன்" க்கு { Ombudsman } அதிகாரம் உள்ளது.

மேலும் வங்கி அதிகாரிகளின் குற்றம் தொடர்ந்து அதிகமாக இருந்தால் சமந்தப்பட்ட வங்கி கிளை மூடப்படும் அளவிற்கு "ஒபட்சு மேன்" அதிகாரம் உள்ளது.

இதை பார்கையில் எத்தனை காலம் தான் ஏமாற்றுவாய் இந்த நாட்டிலே என்ற பாடல் வரி ஞாபகம் வருகிறது.

எல்லாதிற்கும் ஒரு முடிவு வரும் இனி வரும் காலங்களின் ஒவ்வொரு துறைளும் இதுபோன்ற வாடிக்கையாளர் ஆதரவு நிலையம் இயங்கும் காலம் தொலைவில் இல்லை என்பது மட்டும் உண்மை...

http://sh.st/tT9yJ
ஆதங்கமாக தெரிவித்துள்ளார்.
மே 29 அன்று ரூபாய் 3000/- வங்கி கணக்கில் சேர்ந்துள்ளது.
பின்னர் ஜூன் 18ம் தேதி அவருக்கு நஷ்ட ஈடு தொகை ரூபாய் 525/-ம் செலுத்தி உள்ளனர்.
அந்த சம்பந்த பட்ட வங்கி பலமுறை தொலைபேசியில் தொடர்புகொண்டு நேரில் அழைத்து கைப்பட கடிதமும் வாங்கி உள்ளனர்.
மேலும் சகல மரியாதையும் செய்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது .
இனி உங்கள் வங்கியும் இதுபோன்ற தவறுகளை செய்தால் நீங்களும் யோசிக்காமல் "ஒபட்சுமேன் { Ombudsman }
"http://sh.st/tT9yJ