Friday 30 May 2014

பஞ்சாட்சரம் விளக்கம்

விளக்கம்
பஞ்சாட்சரம் = பஞ்ச + அட்சரம் = ஐந்து எழுத்து
பஞ்சாட்சரம் என்பது ஐந்து எழுத்துக்களால் ஆனது என்று பொருள். இவை "நமசிவாய" என்பதாகும்.

பயன்பாடு
பஞ்சாட்சரம் என்னும் திருவைந்தெழுத்து மந்திரத்தைத் தூலம் (வெளிப்படையாகத் தொழுவது), சூக்கும்(புலப்படாதது-உணரக்கூடியது), அதிசூக்குமம்(ஞானிகளால் மட்டும் உணரமுடிவது) என மூவகையாக திருமூலர் திருமந்திரத்தில் விளக்குகிறார். தூல பஞ்சாட்சரம் அல்லது தூல ஐந்தெழுத்து என்பது சிவாயநம என்பதாகும். சிவாயநம என மானசீகமாகச் (மனதிற்குள்ளேயே கூறுதல்) செபித்தால் சூக்கும அசைவுகள் ஆகாயத்தில் பொருந்தி மூலாதாரம் முதலாக நிற்கும். நமசிவாய என்ற இறைவனை உடலில் பொருந்துமாறு செய்துவிடும்.

சூக்கும பஞ்சாட்சரம் என்பது சிவாயநம என்பதை ஒளியாக நினைந்து ஓதுதல் ஆகும். சிவாய சிவ சிவ என்பது அதிசூக்கும பஞ்சாட்சரமாகும். சிவயநம என்பது சிவ பஞ்சாட்சரம். சிவாயநம என்பது சத்தி பஞ்சாட்சரம். வகாரம் நீண்டு தீர்க்கமாக இருப்பதால் சத்தி பஞ்சாட்சரமாகும்.

No comments:

Post a Comment