Tuesday, 1 July 2014

செக்ஸ் அடிமை (sexual addiction)

 


 
குடி போதை மயக்கத்தை அனுபவித்தவர்கள் அதில் இருந்து மீள முடியாமல் மீண்டும் மீண்டும் குடியைப் பற்றியே சிந்திப்பது போல் சிலர் செக்ஸ் அடிமைகளாக இருப்பது உண்டு. இந்த அடிமைத்தனம் காரணமாக எந்தநேரமும் அதைப்பற்றியே சிந்தித்தல், அன்றாட சொந்த வேலைகளைக்கூட செய்ய முடியாமல் சிரமப்படுதல் போன்றவை ஏற்படலாம். அது ஆண், பெண் இருவருக்கும் பொதுவானது. ஆண்களுக்கு இந்த குறைபாடு அதிகரிக்கும் போது ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களுடன் உறவு கொள்ளுதல், ஒரே நேரத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட பெண்களுடன் உறவு கொள்ளுதல், ஆண் ஆணுடன் உறவு கொள்ளுதல் போன்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
இந்த நிலையில் மேலும் பல கலாசார சீரழிவுக்கான செயல்களில் ஈடுப்படுவதைக் காணமுடியும். கீழ்க்கண்ட செயல்பாடுகளைக் காண நேர்ந்தால், அது செக்ஸ் அடிமை என்ற நிலை என்பதை உறுதி செய்ய முடியும்.
*அடிக்கடி சுய இன்பம் காணுதல்
*பல்வேறு உறவுகள்
*எப்போதும் செக்ஸ் படங்கள் பார்த்தல்
*போன் செக்ஸ் அல்லது கம்ப்யூட்டர் செக்ஸ்
*எக்ஸிபிஸனிசம் எனப்படும் அடுத்தவர்களிடம் தன் உறுப்பைக் காட்டுவதில் ஆனந்தம் அடைதல்
*செக்ஸ் துன்புறுத்தல்
*கற்பழித்தல்
*அதிக பார்ட்னர்களை விரும்புதல்
இது போன்ற குறைபாடுகள் இருந்தால், உடனடியாகப் போதிய சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம். இல்லையெனில் உடல் நலம், பணம், சமுதாயச் சிக்கல் ஏற்படுவது மட்டுமின்றி, காவல்துறை நடவடிக்கையிலும் சிக்கிக் கொள்ள நேரிடலாம். அதனால் குடும்ப உறவு சீரழிந்து கணவன் மனைவி உறவு கெட்டுப்போகலாம். தம்பதிகளுக்குள் இருவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவு உறவு கொள்வது மட்டுமே ஏற்றுக்கொள்ளக்கூடியது. இதை மருத்துவச் சிகிச்சை, கவுன்சலிங், மருந்துகள் கொடுப்பதன் மூலம் தீர்த்துக்கொள்ள முடியும்.
பொதுவாக சிலருக்கு செக்ஸ் உணர்வு மிக குறைவாக அல்லது இல்லாத நிலையும், சிலருக்கு மிக அதிகமாகவும் இருக்கும். ஆணுக்கு செக்ஸ் உணர்வு அதிகமாக உள்ள நிலையை சேட்டிரியாஸிஸ் (satyriasis) என்று சொல்வார்கள். பெண்ணுக்கு செக்ஸ் உணர்வு அதிகமாக இருந்தால் நிம்போமேனியா (nymphomania) என்று சொல்லுவார்கள். இந்த குறைபாட்டால் தான் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவி மக்களைப் பயமுறுத்துகின்றன. எப்படியாயினும் அதிக முறை உறவு அனுபவிக்க விரும்புபவரை செக்ஸ் அடிமை என்று சொல்லிவிடக் கூடாது, செக்ஸில் தவறான அணுகுமுறையைக் கடைப்பிடித்து எந்த நேரமும் அதே சிந்தனையில் இருப்பவர்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்க வேண்டும்

பெண் உச்சம் அடைதல் ஏன் தாமதமாகிறது?

 


ஆணைவிட பெண்ணுக்குக் கலவி உச்சம் தாமதப்படுகிறது என்பதற்கு, வரலாற்றுரீதியாக பெண்ணின் பாலியல் வெளிப்பாடு ஒடுக்கப்பட்டிருப்பதே காரணம். உச்சகட்டம் என்பதை அறியாத இந்தியப் பெண்கள் 80 சதவீதத்துக்கும் மேல் இருக்கின்றனர் என்றும், அவ்வாறு அடக்கப்பட்ட பாலுந்த ஆற்றல் (Libidonal Energy), பெண்களை மனநோய்க்கு ஆளாக்கி வருகிறது என் றும் பாலியல் ஆய்வு சொல்கிறது.


 
மனநோய் என்பது கோபம், வக்கிரம், எரிச்சல், எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வதில் தொடங்கி பிள்ளைகளை அடிப்பதுவரை 40 வகைகள் எனச் சொல்கிறது அந்த ஆய்வு. மேலும், பெண்ணை உச்சகட்டம் அடையவைப்பது தொழில்நுட்பம் சார்ந்த விஷயம். கிளைட் மசாஜ் தொடங்கி ஜி ஸ்பாட் வரை அது தொடர்கிறது.
ஆண் பெண் சேர்ந்து உடலுறவு மேற்கொள்ளும்பட்சத்திலும், ஒரு பெண்ணை எந்த ஆணும் உச்சகட்டத்துக்குக் கொண் டுசெல்ல முடியாது. பெண் தானே அதை அடைவதைத் தவிர வேறு வழி இல்லை. அதாவது, ஒரு பெண் கலவியில் சுதந் தரமாக ஈடுபட்டு தன் மனநிலை மற்றும் உடலைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். அவளது உச்சக்கட்டத்துக்கு ஆண் உதவுவதுதான் ஒரே சாத்தியம் அல்லது ஆண் ஒரு கருவியாகச் செயல்பட வேண்டும். ஆண்கள், புற விளையாட்டுகளில் (Foreplay) அதிகக் கவனம் செலுத்த வேண்டும் என்பதையே பெண்கள் விரும்புகிறார்கள்.
பெண் உடலை ஒரு காமம் துய்க்கும் களமாகக் (Erotic Site) கருதாமல், ஒரு பாலியல் விளையாட்டாக()மாற்ற வேண்டும். பாலியலை நமது தன்னமைவில் இருந்து (Sexual Act) கழற்ற வேண்டும். பசி, தூக்கம் போன்று பாலுறவு என்பது மற்றொரு அடிப்படைச் செயல் (Basic Instinct) என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
பாலுறவில் பெண் உச்ச நிலையை அடைய, பாலுறவில் கட்டமைக்கப்பட்டுள்ள அனைத்து ஒழுங்கு விதிமுறைகளையும் உடைக்க வேண்டும். அதாவது, பலவகையான செக்ஸ் செயல்பாடுகள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்து பரவலான பயம் அற்ற புரிதலுடன் சந்தோஷமாகச் செயல்படும் நிலையில், பெண் தாமதம் இல்லாமல் ஆணுடன் இணைந்து ஒரே நேரத்தில் உச்சக்கட்டத்தை அனுபவிக்க முடியும்.

பெண் – ஆண் விடலைப்பருவம் (13-15 வயது) – 10 குறிப்புகள்

 



1. இந்த 13 -15 வயது காலகட்டத்தில், பெண் – ஆண் பாலின உறுப்புகள் வேகமாக வளர ஆரம்பிக்கின்றன. சுமார் 13 வயது பிற்பகுதியில் ஆரம்பித்த பருவ வளர்ச்சி, சுமார் 15 வயதில் கிட்டத்தட்ட 75 சதவிதம் முழு வளர்ச்சி அடைகிறது.


 
2. சுமார் 12-14 வயது காலகட்டத்திலேயே, ஆணும், பெண்ணும் இனவிருத்தி செய்யக்கூடிய அளவில் இருக்கிறார்கள்.
3. சுமார் 13 – 14 வயதில், பெண்ணிற்கு முதல் மாதவிடாய் ஆரம்பமாகிறது. ஆனால், அதற்கு சுமார் 2 வருடங்களுக்கு முன்பே, பாலியல் ஹார்மோன்கள் சுரப்பதால், பருவத்தின் அறிகுறிகள் ஆரம்பமாகி விடுகின்றன. இந்த வளர்ச்சி 17 – 18 வயதில் முடிவடைகிறது,
4. பெண்களுக்கு வெளிப்படையாகத் தோன்றும் மாறுதல்கள்:
அ. முகத்தில் மினுமினுப்பு கூடுதல்.
ஆ. கண்களில் அழகும் கவர்ச்சியும் தோன்றல்.
இ. புன்னைகையில் பல அர்த்தங்கள் காணல்.
ஈ. இடுப்பு எலும்புகள் அகலமாதல்.
உ. புட்டப்பகுதியில் கொழுப்பு சேர்த்து அகலமாதல், மார்புகள் சிமிழ்போல் வளர்ச்சி அடைதல்.
ஊ. பெண்குறியின் உதடுகள் சற்று தடித்தல்.
எ. தலைமுடி அடர்ந்து வளருதல் போன்றவை ஏற்படும்.
5. ஆண்களுக்கு, சுமார் 12 வயதில் ஆரம்பமாகும் பருவ மாறுதல், 13 – 17 வயதில் உச்சத்தை அடைந்து, சுமார் 18 – 19 வயதில் ஒரு நிலைக்கு வந்து விடுகிறது.
6. ஆண்களுக்கு வெளிப்படையாகத் தோன்றும் மாறுதல்கள்.
அ. ஆண்குறியின் அடிப்பாகம் மற்றும் விதைப்பைகளின் மேல் பாகத்தில் மயிர் நன்றாக வளருதல்.
ஆ. விதைகளும், விதைப்பைகளும் பெருத்தல்.
இ. குறி விறைப்பு அடிக்கடி நிகழுதல்.
ஈ. உடல் உயரமும், எடையும் திடீரென்று கூடுதல்.
உ. தோள்கள் விரிவடைதல்.
ஊ. குரல் உடைந்து வெளிப்படுதல்.
எ. மேல் உதடு, மார்பு போன்றவற்றில் மயிர் வளருதல்.
ஏ. விந்து உற்பத்தியாகி, கனவுகள் மூலம் இன்ப அதிர்வுடன் வெளியேறுதல்.
7. அடிக்கடி பாலியல் உணர்வு உந்துதலால், கல்வியைவிட, கலவியில் நாட்டம் அதிகமாக இருக்கும்! மனதை, அதன்போக்கில் சற்றுவிட்டுத் திருப்ப வேண்டும். அடக்குதல் கூடாது. எதையும் விழிப்புணர்வோடு பார்க்கவும். அதே நினைப்பு வேண்டாம்.
8. சுய இண்பம் காண பெரும் விருப்பம் ஏற்படும். இதில் எந்தக்குற்ற உணர்வும் கொள்ள வேண்டாம். இது மிகவும் இயல்பானது. இதனால் உடலுக்கு எந்தத் தீங்கும் கிடையாது. இது விஞ்ஞானரீதியாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
9. இதுவரை இருந்து வந்த தன் இன மோகம், இப்பொழுது எதிர்ப்பால் இனத்திடம் தாவும்.
10. காதலுக்கும், இனக்கவர்ச்சிக்கும் வித்தியாசம் தெரியாத பருவம். ஆகவே, இதுபாலரும் மிகவும் விழிப்பாக, அறிவுபூர்வமாக எதையும் சிந்திக்க வேண்டும்

உறவு கொள்ள பாதுகாப்பான நாட்கள் எவை?

 


 
உலகெங்கும் உள்ள கோடிக்கணக்கான பெண்கள் தமது மாதவிடாய்ச் சக்கரத்தில் பாதுகாப்பான நாட்களில் மாத்திரம் உடலுறவு கொள்வதன் மூலம் கர்ப்பம் தங்காமல் தவிர்க்கிறார்கள். சில நாடுகளில் நான்கு பெண்களுக்கு ஒருவர் என்ற சராசரி அளவில் பெண்கள் இம் முறையைப் பயன்படுத்துகிறார்கள்.

சரியான முறையில் இதனைக் கடைப்பிடித்தால் அது 75 முதல் 90% வரையில் வெற்றி அளிக்கக் கூடியது. இதில் முக்கியமான விடயம் என்னவெனில் விஞ்ஞான பூர்வமாகச் சரியான நாட்களைத் தேர்ந்தெடுப்பதுதான். அது மிகவும் சிக்கலானது என்பதே பிரச்சனை.
மாதவிடாய்ச் சக்கரம்
சரியான நாட்களைத் தேர்ந்தெடுப்பதற்கு மாதவிடாய்ச் சக்கரம் என்றால் என்ன என்பதை முதலில் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
மாதவிடாய் சக்கரத்தில் பெண்ணின் சூலகத்திலிருந்து (ovary) முட்டை (egg) வெளியாகி ஃபெலோப்பியன் குழாய் (fallopian tube) வழியாக பயணம் செய்து கர்ப்பப்பையை அடையும். சூலகம் என்று கூறிய Ovary யை கருவகம் எனவும் சொல்வதுண்டு.
இம் முட்டையானது 24 மணி நேரம் மட்டுமே உயிர் வாழக் கூடியது. எனவே கர்ப்பம் தரிக்க வேண்டுமானால் அந்த 24 மணிநேர கால அவகாசத்திற்குள் ஆணிலிருந்து வெளியாகும் விந்தணுவைச் சந்தித்தாக வேண்டும்.
இதன் அர்த்தம் அந்த 24 மணிநேர காலத்திற்குள் உறவு கொண்டால் மட்டுமே கரு தங்கும் என்பதல்ல.
ஆணின் விந்தணுவனாது உறவின் போது வெளியேறி பெண்ணின் கர்ப்பப் பையூடாக பலோப்பியன் குழாயைச் சென்றடைந்த பின்னர் பல நாட்களுக்கு உயிரோடு இருக்கக் கூடியதாகும். அது அவ்வாறு காத்திருக்கும் காலத்திற்குள் முட்டை வெளியேறினால் கருக்கூட்டல் நடைபெறும்.
பாதுகாப்பான நாட்களைக் கண்டறிவது எப்படி?
எனவே பாதுகாப்பான நாட்களைக் கண்டறிவது எப்படி? ஏனெனில் சூலகத்திலிருந்து முட்டை வெளியேறும் சரியான தினத்தை முற்கூட்டியே அறிவது சிரமம். இருந்தபோதும் பெரும்பாலான பெண்களில் இது அடுத்த மாதவிடாய் வருவதற்கு 14 முதல 16 வரை முன்னராகும்.
பொதுவான மாதவிடாய் சக்கரம் என்பது 28 நாட்களாகும். இதுவே பெரும்பாலான பெண்களுக்குப் பொருந்தும். ஆனால் பலருக்கு இதற்குக் குறைவான அல்லது கூடிய நாள் இடைவெளிகளில் மாதவிடாய் வருவதுண்டு.
உங்களது மாதவிடாய்சக்கரம் 35 நாட்கள் நீண்ட என்றால் உங்கள் சுழற்சியின் 14ம் நாளன்றுகருத்தரிக்க வாய்ப்பில்லை நீங்கள் 15 நாட்கள் சுமார் 28 முதல் வரை கவனமாக இருக்க வேண்டும்.
மாறாக உங்களது மாதவிடாய் சக்கரம் 23 நாட்கள் என்றால் முட்டையானது 7- 9 வது தினத்தில் வெளியேறும். எனவே அத்தகையவர்களுக்கு 15 நாட்களுக்கு பின்னர் பாதுகாப்பான நாட்களாக இருக்கலாம்.தவறாகக் கணக்கிட வேண்டாம்
உங்களுக்கு மாதவிடாய் வெளியேற ஆரம்பிக்கின்ற நாளை சக்கரத்தின் முதல் நாளாகக் கொள்ள வேண்டும். அடுத்த மாதம் மாதவிடாய் வந்த நாளுக்கு முந்திய நாள் சக்கரத்தின் கடைசி நாளாகும். பொதுவாக இச்சக்கரம் 28 நாட்களாக இருக்க வேண்டும்.
சில பெண்கள் மாதவிடாய் படுவது நின்ற தினத்தைச் சக்கரத்தின் முதல் நாள் என நினைப்பதை நான் கண்டிருக்கிறேன். அதாவது நான்கு நாட்களுக்கு இரத்தப் போக்கு இருந்தால் அது நின்ற ஜந்தாவது நாளையே முதல் நாள் என எண்ணுகிறார்கள். இது தவறானது. மாதவிடாய் வெளியேற ஆரம்பிக்கின்ற ஆரம்ப நாள்தான் சக்கரத்தின் முதல் நாளாகும்.
ஆனால் எல்லாப் பெண்களதும் மாதவிடாயச் சக்கரம் ஒழுங்காக இருப்பதில்லை. கடந்த ஒரு வருட காலத்தில் அது ஒழுங்காக 28 நாள் சக்கரமாக இருந்திருந்தால் இம் முறையை நீங்கள் பயன்படுத்தலாம்.
முக்கியமாக கடந்த ஒரு வருட காலத்தில் இச் சக்கரமானது 26 முதல் 32 நாட்கள் என்ற வரையறைக்குள் இருந்தால் இம் முறையைப் பயன்படுத்தலாம். இவர்களுக்கு தமது மாதவிடாயச் சக்கரத்தின் 8 முதல் 19 ம் நாள் வரையான நாட்கள் கருத்தங்கக் கூடிய நாட்களாகும்.
இவர்கள் தமது சக்கரத்தின் முதல் 7 நாட்களிலும், பின்னர் 23ம் நாளுக்குப் பின்னரும் பயமின்றி உறவு கொள்ளலாம்.
8 முதல் 23 வரையான நாட்களில் உடலுறவு கொள்வதாயின் ஆணுறையை அணிந்து கொண்டு உறவு கொள்ளலாம்.
எவ்வாறாயினும் இது பூரண பாதுகாப்பான முறை என்று சொல்ல முடியாது.
ஒழுங்காக மாதவிடாய் வருகின்ற பெண்களில் கூட சிலருக்கு சில அசாதாரண சூழல்களின் போது காலம் முந்தியோ அல்லது பிந்தியோ ஏற்படலாம். எனவே நிச்சமாக கருத் தங்கக் கூடாது எனக் கருதுபவர்கள் வேறு ஒரு முறையை கடைப்பிடிப்பதே பாதுகாப்பானதாகும்.

செக்ஸ் அடிமை நிலை என்பதை உறுதி செய்ய

 


குடிபோதை மயக்கத்தை அனுபவித்தவர்கள் அதில் இருந்து மிள முடியாமல் மீண்டும் மீண்டும் குடியைப் பற்றியே சிந்தித்துபோல் சிலர் செக்ஸ் அடிமைகளாக இருப்பது உண்டு. இந்த அடிமைத்தனம் காரணமாக எந்நேரமும் அதைப் பற்றியே சிந்தித்தல் அன்றாட சொந்த வேலைகளைக் கூட செய்ய முடியாமல் சிரமப்படுதல் போன்றவை ஏற்படலாம். இது ஆண் – பெண் இருவருக்கும் பொதுவானது. ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களுடன் உறவு கொள்ளுதல், ஒரே நேரத்தில் இரணடுக்கும் மேற்பட்ட பெண்களுடன் உறவு கொள்ளுதல் போன்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
இந்த நிலையில் மேலும் பல கலாசார சீரழிவுக்கான செயல்களில் ஈடுபடுவதை காணமுடியும். கீழ்கண்ட செயல்பாடுகளை காண நேர்ந்தால் அது செக்ஸ் அடிமை நிலை என்பதை உறுதி செய்ய முடியும்.
* அடிக்கடி சுய இன்பம் காணுதல்
* பலடவேறு உறவுகள்
* எப்போதும் செக்ஸ் படங்கள் பார்த்தல்
* போன் செக்ஸ் அல்லது கம்ப்யூட்டர் செக்ஸ்
* எக்ஸ்பிஸனிசம் எனபப்டும் அடுத்தவர்களிடம் தன் உறுப்பை காட்டுவதில் ஆனந்தம் அடைதல்
* செக்ஸ் துன்புறுத்துதல்
* கற்பழித்தல்
* அதிக பாட்னர்களை விரும்புதல்
இது போன்ற குறைபாடுகள் இருந்தால் உடனடியாக போதிய சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம். இல்லையெனில் உடல்நலம், பணம், சமுதாயச் சிக்கல், ஏற்படுவது மடடுமின்றி காவல்துறை நடவடிக்கையிலும் சிக்கிக் கொள்ள நேரிடலாம். அதனால் குடும்ப உறவு சீரழிந்து கணவன் – மனைவி உறவு கெட்டுப்போகலாம். தம்பதிகளுக்குள் இருவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய அளவு உறவு கொள்வது மட்டுமே ஏற்றுக் கொள்ளக்கூடியது ஆகும். இதை மருத்துவ சிகிச்சை, கவுன்சிலிங், மருந்துகள் கொடுப்பதன் மூலம் தீர்த்துக்கொள்ள முடியும்.
பொதுவாக சிலருக்கு செக்ஸ் உணர்வு மிகக் குறைவாக அல்லது இல்லாத நிலையும், சிலருக்கு மிக அதிகமாகவும் இருக்கும். ஆணுக்கு செக்ஸ் உணர்வு அதிகமாக உள்ள நிலையை சேட்டிரியாஸிஸ் என்று சொல்வார்கள். பெண்ணுக்கு செக்ஸ் உணர்வு அதிகமாக இருந்தால் நிம்ஃபோமேனியா என்று சொல்வார்கள். இந்த குறைபாட்டால்தான் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவி மக்களை பயமுறுத்துகின்றன.
எப்படியானும் அதிக முறை உறவு அனுபவிக்க விரும்புவரை செக்ஸ் அடிமை என்று சொல்லிவிடக் கூடாது. செக்ஸில் தவறான அணுகுமுறையை கடைபிடித்து எந்நேரமும் அதே சிந்தனையில் இருப்பவர்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்க முடியும்.

காமத்தை அடக்கும் வழிகள்!


மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கைக்கு படுக்கையில் ஆடையின்றி தூங்குங்கள் ஆய்வில் தகவல்




 லண்டன்
அமெரிக்காவில் உள்ள காட்டன் அமெரிக்கா  என்ற அமைப்பு இங்கிலாந்தை சேர்ந்த 1004 தம்பதிகளிடம் ஒரு வித்தியாசமான கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது. தம்பதிகள் இரவில் படுக்கையில் தூங்கும்போது எவ்வாறு  தூங்குகிறார்கள் என்றும், அவர்களுக்குள் இருக்கும் உறவின் தன்மை அதனால் எப்படி உள்ளது என்றும் ஒரு கருத்துக்கணிப்பை எடுத்துள்ளனர். அதனுடைய முடிவை நேற்று வெளியிட்டது.

57 சதவிகித தம்பதிகள் இரவு படுக்கையில் உடையில்லாமல் நிர்வாணமாக தூங்குவதையே விரும்புவதாக கருத்து தெரிவித்துள்ளனர். நிர்வாணமாக தூங்கினால் படுக்கையறையில் தங்களுக்குள் எவ்வித கருத்துவேறுபாடுகளும் வருவதில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் நெருங்கிய நட்பும், வெளிப்படைத்தன்மையும் இதன்மூலம் தங்களுக்குள் பகிரப்படுவதாக அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் 48 சதவீத தம்பதிகள் பைஜாமா போன்ற உடைகளை அணிந்து தூங்குவதாகவும், இதுவே தங்களுக்கு வசதியான உடையாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். 43 சதவீதம் பேர் நைட்டி போன்ற உடைகளை அணிவதாகவும், 15 சதவீதம் பேர் உடைக்கும் தங்களுடைய உறவு மேம்படுவதற்கும் சம்மந்தமில்லை என்றும் அது மனம் சம்மந்தப்பட்டது என்றும் கூறியுள்ளனர்.

மன்ஹட்டனை சேர்ந்த உறவு மற்றும் சிகிச்சை நிபுணர்  அம்பர் மடிசன் கூறியதாவது:-உங்கள் துணையுடன் நீங்கள் படுக்கையில்  ஆடையின்றி படுப்பது  உங்களுக்குள் உடல் மற்றும் உண்ர்வு ரீதியாக நெருக்கத்தை ஏற்படுத்துகிறது. நான் உனக்கு நெருக்கமாக இருக்கிறேன் எனவும் செக்ஸ் உறவுக்கும் அது பச்சை கொடி காட்டுவது போன்று.இப்போது உள்ல சவாலான வாழக்கை சூழ்நிலையில் இது போன்ற செயல்கள்  தம்பதியரிடையே நெருக்கமும் வலுவான உறவும் ஏற்பட தேவை என கூறி உள்ளார்.